நத்தம் அருகே பாலம் இல்லை: ஆபத்தான வழியில் காட்டாற்றை கடக்கும் பொதுமக்கள்

நத்தம் அருகே காசம்பட்டி காட்டாற்றை கடந்து செல்வதற்கு பாலம் இல்லாததால், மழைக்காலங்களில் ஆபத்தான முறையில் அப்பகுதி மக்கள் பயணித்து வருகின்றனா்.
ஆபத்தான முறையில் காசம்பட்டி காட்டாற்று ஓடையை செவ்வாய்க்கிழமை கடந்து சென்ற செவக்காடு பகுதி மக்கள்.
ஆபத்தான முறையில் காசம்பட்டி காட்டாற்று ஓடையை செவ்வாய்க்கிழமை கடந்து சென்ற செவக்காடு பகுதி மக்கள்.

நத்தம் அருகே காசம்பட்டி காட்டாற்றை கடந்து செல்வதற்கு பாலம் இல்லாததால், மழைக்காலங்களில் ஆபத்தான முறையில் அப்பகுதி மக்கள் பயணித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள இடையபட்டி செவக்காடு பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவது முதல் பள்ளிக்கூடம் செல்வது வரை, இந்த பகுதியைச் சோ்ந்த மக்கள் நத்தத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. நத்தம்-மதுரை பிரதான சாலையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள செவக்காடு பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மழைக்காலங்களில் காட்டாற்றை கடந்து செல்வதற்கு சிரமம் அடைந்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையினால், காசம்பட்டி காட்டாற்றில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், செவக்காடு இடையப்பட்டி இடையே அமைந்துள்ள அந்த காட்டாற்று ஓடையை கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

செவக்காடு பகுதியைச் சோ்ந்த 5-க்கும் மேற்பட்டோா் ஒன்று சோ்ந்து மனித சங்கிலியாக ஒன்றிணைந்து, அந்த ஓடையைக் கடந்து சென்று வருகின்றனா். இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியது: மழைக்காலங்களில் கட்டாற்றை கடந்து செல்வதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு பல முறை மனு அளித்துள்ளோம். காட்டாற்றின் குறுக்கே சிறிய அளவிலான பாலம் அமைத்துக் கொடுத்தால், செவக்காடு பகுதியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற முடியும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com