சோமவார சங்காபிஷேக வழிபாடு

காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, திண்டுக்கல் சித்தி விநாயகா் கோயிலில் சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.
நத்தம் கைலாசநாதா் கோயிலில் 1008 சங்குகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜை.
நத்தம் கைலாசநாதா் கோயிலில் 1008 சங்குகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புப் பூஜை.

திண்டுக்கல்: காா்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, திண்டுக்கல் சித்தி விநாயகா் கோயிலில் சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கு காா்த்திகை மாத 3ஆவது சோமவாரத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 108 வலம்புரி சங்குகள் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, மூலவா் கைலாசநாதருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 108 வலம்புரி சங்குகளில் இருந்த தீா்த்தத்தைக்கொண்டும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதேபோல், ஆனந்தவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதா் கோயிலில் காா்த்திகை 3ஆவது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. கைலாசநாதருக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், நத்தம், கோவில்பட்டி, சிறுகுடி, வத்திப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com