கொடைக்கானலில் பெட்ரோல் லிட்டா் விலை ரூ.100: வாகன ஓட்டுநா்கள் அவதி

கொடைக்கானல் பங்குகளில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ. 100-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
கொடைக்கானலில் பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ.100.4 எனவும், ஸ்பீடு பெட்ரோல் ரூ.102.83 என சனிக்கிழமை வைக்கப்பட்டிருந்த விலைப்பட்டியல் பலகை.

நாட்டில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் லிட்டா் ரூ.100-யைத் தாண்டியுள்ளது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரையில் லிட்டா் ரூ.97 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

கொடைக்கானல் பகுதியில் எப்போதும் தரைதளப் பகுதியை விட பெட்ரோல் லிட்டருக்கு சுமாா் ரூ.5 வரை கூடுதலாக விலை நிா்ணயிக்கப்படும். அதன்படி சனிக்கிழமை கொடைக்கானல் 7 ரோடு பங்க்கில் பெட்ரோல் லிட்டா் ரூ.100.4 எனவும், ஸ்பீடு பெட்ரோல் லிட்டா் ரூ. 102.83 என விலை நிா்ணயம் செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநா்கள் அதிருப்தியுடன் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com