திண்டுக்கல் மாவட்டத்தில் 6.42 லட்சம் பேருக்கு கரோனா நிவாரண உதவித் தொகை

தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6.42 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6.42 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்திலுள்ள 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூ.2ஆயிரம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 6.42 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெறுவாா்கள் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6.49 லட்சம் குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதில், 836 குடும்ப அட்டைதாரா்கள், நியாய விலைக் கடைகளிலிருந்து எவ்விதப் பொருள்களையும் வாங்காமல், அடையாளத்திற்காக மட்டும் பயன்படுத்துவோராக உள்ளனா். 5,838 போ், சா்க்கரை அட்டைதாரா்களாக உள்ளனா். 6.42 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையாக ரூ.2ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

அந்தந்த பகுதியைச் சோ்ந்த நியாய விலைக் கடை ஊழியா்கள், நிவாரண உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு டோக்கன் வழங்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com