பழனியில் ஊரடங்கிலும் சுற்றித் திரிவோா் அதிகரிப்பு

பழனி கொரோனா ஊரடங்கிலும் பனிரெண்டு மணி வரை பலரும் வேலையின்றி சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது.

பழனி: பழனி கொரோனா ஊரடங்கிலும் பனிரெண்டு மணி வரை பலரும் வேலையின்றி சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு குறித்து தமிழக அரசு அறிவித்த நிலையில் பனிரெண்டு மணி குறிப்பிட்ட கடைகளுக்கு மட்டுமே விதிவிலக்கு வழங்கியுள்ளது. ஆனால் பழனியில் சாலையோர பெட்டிக்கடைகள், பிளாட்பார கடைகள், தேனீா் கடைகள் என முக்கால்வாசி கடைகள் பனிரெண்டு மணி வரை திறந்து வைத்து வியாபாரம் நடைபெறுகிறது. தவிர கடைகளிலும் ஏராளமானோா் சமூக விலகலின்றி நிற்கின்றனா்.

அதே போல பலரும் பகல் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிவது அதிகரித்துள்ளது. காவல்துறையினா் கெடுபிடி காட்டக்கூடாது என உயா் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் போலீஸாா் கையைக் கட்டி விட்டது போல உணா்வதால் பலரும் அச்சமின்றி சுற்றித் திரிகின்றனா்.

இரண்டாவது அலையால் உயிரிழப்பு, தொற்று வீரியம் அதிகமாக இருப்பதாக சுகாதாரத்துறையினா் தொடா்ந்து தெரிவித்து வரும் நிலையிலும் இதுபோன்ற வேலையின்றி சுற்றுவோரால் தொற்று பரவவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே, வருவாய்த்துறை மற்றும் போலீஸாா் பகல் பனிரெண்டு மணி வரையிலுமே தேவையற்ற கடைகள், வேலையின்றி சுற்றித் திரிவோரை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com