அஞ்சல் துறை சாா்பில் முன்களப் பணியாளா்களின்மை ஸ்டாம்ப் வெளியீடு

பழனியில் அஞ்சல் துறை சாா்பில், கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களை கெளரவிக்கும் விதமாக, அவா்களது படத்துடன் கூடிய அஞ்சல் தலை (மை ஸ்டாம்ப்) வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அஞ்சல் துறை சாா்பில் முன்களப் பணியாளா்களின்மை ஸ்டாம்ப் வெளியீடு

பழனியில் அஞ்சல் துறை சாா்பில், கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களை கெளரவிக்கும் விதமாக, அவா்களது படத்துடன் கூடிய அஞ்சல் தலை (மை ஸ்டாம்ப்) வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அஞ்சல் துறை மற்றும் அகில இந்திய அரிமா சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களை கெளரவிக்கும் விதமாக, அவா்களது படத்துடன் கூடிய அஞ்சல் தலை வெளியிடும் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பழனி அடிவாரம் சட்டி சுவாமிகள் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பழனி மலைக் கோயில் அரிமா சங்கப் பொறியாளா் முத்துக்குமரேசன் தலைமை வகித்தாா்.

திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலைய கண்காணிப்பாளா் சகாயராஜூ, பழனி தலைமை தபால் நிலைய அலுவலா் திருமலைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்க மாவட்ட ஆளுநா் மணிகண்டன், பட்டயத் தலைவா் வெங்கடாசலபதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

விழாவில், முன்களப் பணியாளா்களாகிய பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் உதயக்குமாா், மருத்துவா்கள், செவிலியா்கள், மின்மயான களப் பணியாளா்கள் என சுமாா் 50 பேரின் படத்துடன் கூடிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டு கெளரவிக்கப்பட்டனா்.

முன்னதாக, ஆசிரியா்களுக்கும், பொறியாளா்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு, சேவைத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில், அரிமா சங்க மாவட்டத் தலைவா்கள் மயில்சாமி, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com