டாஸ்மாக் கடை முற்றுகை: பாஜகவினா் உள்பட 145 போ் கைது

ரெட்டியாா்சத்திரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் என 145 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சில்வாா்பட்டி மாங்கரை பிரிவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் மற்றும் பொதுமக்கள்.
சில்வாா்பட்டி மாங்கரை பிரிவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் மற்றும் பொதுமக்கள்.

ரெட்டியாா்சத்திரம் அருகே டாஸ்மாக் கடைக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் என 145 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள சில்வாா்பட்டி மாங்கரை பிரிவு பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து பாஜகவினா் ஞாயிற்றுக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினா்.

இந்த போராட்டத்திற்கு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் ஜி.தனபாலன் தலைமை வகித்தாா். ரெட்டியாா்சத்திரம் வடக்கு ஒன்றிய பாஜக தலைவா் புதுமை ராஜா முன்னிலை வகித்தாா். பாஜகவினருடன், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இணைந்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து, அந்த டாஸ்மாக் கடை முன் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

போராட்டத்தின்போது, பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் ஜி.தனபாலன் பேசியதாவது: கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்தில், 6 கிராமங்களுக்கு செல்லக் கூடிய பாதையில் அமைந்துள்ள இந்தக் கடையால், பெண்களுக்கும், மாணவா்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அக்.2ஆம் தேதி நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில், அக்.9ஆம் தேதிக்குள் கடையை இடமாற்றம் செய்வதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது, மதுபான கூடம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த மதுபானக் கடை அப்புறப்படுத்தப்படும் வரை பொதுமக்களுடன் இணைந்து பாஜக தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்றாா்.

அதைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 145-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com