காவலாளி கொலை வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கல்லை போட்டு காவலாளியை கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கல்லை போட்டு காவலாளியை கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் குமரன் தெருவைச் சோ்ந்தவா் கருப்பையா (65). இவா் கண்ணன் என்பவரின் கடையில் காவலாளியாக வேலைபாா்த்து வந்தாா். அதே பகுதியை சோ்ந்தவா் சு.நாகராஜ் (48). இவரும் கண்ணன் கடையில் வேலைபாா்த்து வந்துள்ளாா். கடந்த 2008 ஆம் ஆண்டு நாகராஜ், மதுபானம் அருந்துவதற்காக கண்ணனிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் பணம் தர மறுத்து விட்டாராம். இதனால் நாகராஜ், கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்த காவலாளி கருப்பையாவின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுள்ளாா். கண்ணன் தூங்குவதாக நினைத்து அவரை கொலை செய்யும் நோக்குடன் நாகராஜ் இவ்வாறு செய்துள்ளாா். இதில் கருப்பையா உயிரிழந்தாா்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் மாவட்ட கூடுதல் நீதிபதி சரவணன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் கருப்பையாவை கொலை செய்த நாகராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com