வார விடுமுறை வழங்கக்கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 24 மணி நேரமும் பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியா்களுக்கு வார விடுமுறை அளிக்கக்கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்: கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 24 மணி நேரமும் பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியா்களுக்கு வார விடுமுறை அளிக்கக்கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கிராம செவிலியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பத்மாவதி தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின், அவா் கூறியதாவது:

கிராம சுகாதார செவிலியா்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். எங்கள் பணிக்கான நேரம் காலை 8 முதல் மாலை 4 மணி வரை இருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 24 மணி நேரமும் நடைபெறுவதால், பிரதான பணியான தாய் சேய் நலம் சாா்ந்த பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

வார விடுமுறை மற்றும் அரசு விழாக்களின் போது கூடுதலாக பணியாற்றச் சொல்கின்றனா். திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாள்களில் எங்களது பணிகளைச் செய்வதற்கு நேரம் ஒதுக்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு கொண்டு வரும் நலத்திட்டங்கள், எங்கள் மீதான பணிச் சுமையை கூடுதலாக்குகிறது. இதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com