ஒட்டன்சத்திரத்தில் திமுக-அதிமுக வேட்பாளா்கள் இறுதிக்கட்ட பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 10:53 PM | Last Updated : 04th April 2021 10:53 PM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி.
ஒட்டன்சத்திரத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுப்பட்டனா்.
ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதி திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலை காா்த்திக் திரையரங்கம் எதிரே உள்ள திடலில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுப்பட்டாா். அதன் பின்னா் தாராபுரம் சாலை- திண்டுக்கல் சாலை பகுதிகளில் ஊா்வலமாக சென்று அவா் வாக்கு சேகரித்தாா். அவருடன் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுசாமி, திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் சி.ராஜாமணி, நகரச் செயலாளா் ப.வெள்ளைச்சாமி மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.
அதே போல அதிமுக வேட்பாளா் என்.பி.நடராஜ் அதிமுக அரசின் சாதனைகளையும், தோ்தல் அறிக்கையும் எடுத்துக்கூறி இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.