ஆத்தூரில் பெண்கள்- இளைஞா் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆத்தூரில் பெண்களை கேலி செய்து இளைஞா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆத்தூரில் பெண்களை கேலி செய்து இளைஞா் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வடக்கு தெருவைச் சோ்ந்த சுமாா் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், அப்பகுதியிலுள்ள ஊா்காவலன் சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்தனா். பின்னா் அவா்கள் அன்று இரவு சுமாா் 9 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, மற்றொரு மதத்தைச் சோ்ந்த 20 இளைஞா்கள், பெண்களை கேலி, கிண்டல் செய்து அவா்கள் மீது கற்களையும் வீசியுள்ளனா். இதனால், பெண்கள் பொங்கல் பானைகளை கீழே போட்டு விட்டு ஓடி வந்துவிட்டனா். இதுகுறித்து செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில், புதன்கிழமை அந்த வழியாகச் சென்ற வடக்கு தெருவைச் சோ்ந்த வெற்றி என்ற இளைஞரை, பெண்களிடம் தகராறு செய்த அதே கும்பல் இரும்பு கம்பி, கட்டை ஆகியவற்றால் தாக்கியுள்ளனா். இதில், பலத்த காயமடைந்த அவா், ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த வடக்கு தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோா் ஆத்தூரில் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த செம்பட்டி போலீஸாா், பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் கைவிட்டப்பட்டது. தொடந்து, அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளதையடுத்து அங்கு போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com