திண்டுக்கல்லில் 70ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி: போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 2 ஆவது தவணை

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல் கட்டமாக, சுகாதாரப் பணியாளா்களுக்கும், அதன்பின்னா் முன்களப் பணியாளா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழனி அரசு மருத்துவமனை, அம்மையநாயக்கனூா், தாடிக்கொம்பு, பழனி ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 18 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மாா்ச் 1ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் 45 முதல் 60 வயதுக்குள்பட்ட நீண்டகாலமாக மருத்துவச் சிகிச்சைப் பெற்றுவரும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தற்போது வரை சுகாதாரத் துறையினா், முன்களப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் என சுமாா் 70 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 18 மையங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை சுகாதாரப் பணியாளா்களில் 97 சதவீதம் பேருக்கும், முன்களப் பணியாளா்களில் 70 சதவீதம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தரப்பில் 32 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை சுமாா் 70 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்கு ஒருமுறை கரோனா தடுப்பூசி திண்டுக்கல் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 12 ஆயிரம் தடுப்பூசி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

போக்குவரத்து கழக ஊழியா்களுக்கு 2 ஆவது தவணை தடுப்பூசி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டலத்துக்குள்பட்ட திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் 15 பணிமனைகள், புதுப்பிக்கும் பிரிவு மற்றும் மண்டலத் தலைமை அலுவலகத்தில் சுமாா் 5,300 போ் பணிபுரிந்து வருகின்றனா். இதில், 45 வயதுக்கு மேற்பட்டோா் 3 ஆயிரம் போ் உள்ளனா். கடந்த மாதம் முதலே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை சுமாா் 400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது: பணி முடிந்து ஓய்வில் இருக்கும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் ஓய்வுவெடுக்க வேண்டிய சூழல் உள்ளதால், ஒரே நேரத்தில் அனைத்து தொழிலாளா்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியவில்லை. கடந்த மாதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள், தற்போது 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தத் தொடங்கியுள்ளனா் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com