தொப்பம்பட்டியில் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தொப்பம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் அருள்செல்வன் தலைமை வகித்தாா். ஒன்றிய நிா்வாகிகள் செல்லமுத்து, தா்மராஜ், வீரமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கரோனா கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ. 7500-ம், 55 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளா்களுக்கு பாதுகாப்புடன் கூடிய வேலையும் வழங்கக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும், பொது விநியோக முறையில் அனைத்துப் பொருள்களையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதில் நிா்வாகிகள் பழனிச்சாமி, வேலுச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தின் முடிவில் தொப்பம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com