பழனியில் தரமற்ற சாலைப் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கம்யூனிஸ்ட் மனு

பழனியில் நடைபெற்ற ரூ. 58 கோடி மதிப்பிலான பணிகள் தரமின்றி உள்ளதால் அந்தப் பணிக்கான தொகையை நிறுத்தி வைக்குமாறு

பழனியில் நடைபெற்ற ரூ. 58 கோடி மதிப்பிலான பணிகள் தரமின்றி உள்ளதால் அந்தப் பணிக்கான தொகையை நிறுத்தி வைக்குமாறு கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பழனியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நகராட்சி பங்கேற்புடன் ரூ. 58 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள், சாக்கடைப் பணிகள் மற்றும் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகள் பலவும் தரமின்றி இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

பல்வேறு இடங்களில் மழைநீா் வடிகால் வசதியின்றி சாலை அமைக்கப்பட்டுள்ளதால் மழைநீா் சாலைகளில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. மேலும் பல இடங்களில் நடைமேடைகளில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் உடைந்தும், சரியாக ஒட்டப்படாமலும் உள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை முறையாக செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை ஒப்பந்ததாரருக்கு பணிக்கான தொகையை வழங்கக்கூடாது எனத் தெரிவித்து நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளரிடம், முன்னாள் நகா் மன்றத் தலைவா் ராஜமாணிக்கம் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com