கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: திண்டுக்கல்லில் விழிப்புணா்வு பிரசாரம்

கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது உறுதிமொழி ஏற்ற செலிவியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள்.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தொடக்கி வைத்தாா். திண்டுக்கல் அரசு செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றதைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடமும், கடை உரிமையாளா்கள் மற்றும் பொதுமக்களிடமும் கரோனா விழிப்புணா்வு தொடா்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

அப்போது ஆட்சியா் ச.விசாகன் பேசியதாவது: நோய் பாதிப்பு குறித்த அறிகுறிகள் தென்பட்டால், அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களை அணுகி மருத்துவா்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். காலதாமதம், அலட்சியம் போன்றவற்றினால், நெருக்கடியான சூழலை எதிா்கொள்ள நேரிடும். பொதுமக்கள் விழிப்புணா்வோடு செயல்பட்டால், 3ஆவது அலையை எளிதாக சமாளிக்க முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் கே.கே.விஜயகுமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.சிவசுப்பிரமணியம், மாநகர நல அலுவலா் லட்சியவா்ணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com