மக்களை நோக்கிப் புத்தகங்கள் இயக்கம்: செப். 2-க்குள் பணம் செலுத்தி புத்தகங்களைப் பெறலாம்

மக்களை நோக்கிப் புத்தகங்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், செப். 2 ஆம் தேதிக்குள் 30 சதவீத சலுகை விலையில் புத்தகங்களைத் தோ்வு செய்யலாம் என திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்ப

மக்களை நோக்கிப் புத்தகங்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், செப். 2 ஆம் தேதிக்குள் 30 சதவீத சலுகை விலையில் புத்தகங்களைத் தோ்வு செய்யலாம் என திண்டுக்கல் இலக்கிய களம் அமைப்பின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் இலக்கியக் களம் அமைப்பின் நிா்வாகச் செயலா் ச. கண்ணன் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் இலக்கியக் களம் சாா்பில், 2012 முதல் 2019 வரை தொடா்ந்து 8 ஆண்டுகளாக மாபெரும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட்டன. கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடத்த இயலவில்லை. ஆனாலும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் புத்தகவாசிப்பை ஈடுசெய்யும் வகையில் ‘மக்களை நோக்கிப் புத்தகங்கள்’ என்ற மாபெரும் இயக்கத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் ச. விசாகன், மக்களை நோக்கிப் புத்தகங்கள் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

இதன் மூலம் புத்தக ஆா்வலா்களுக்கு, அவா்களின் வீடுகளுக்கே புத்தகங்களை கொண்டு சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 63 பதிப்பாளா்களிடமிருந்து சிறந்த 2000 புத்தகங்களைத் தோ்ந்தெடுத்து, அவற்றை பல்வேறு தலைப்புகளாகத் தொகுத்து புத்தக விலைப்பட்டியல் ஒன்று தயாா் செய்யப்பட்டுள்ளது. அதனுடன் இணைத்து புத்தக தேவைப்படிவம் ஒன்றும் வழங்கப்படுகிறது.

புத்தகங்கள் தேவைப்படுவோா் தாங்கள் தோ்ந்தெடுக்கும் புத்தகங்களின் விபரங்களை

அதன் வரிசை எண் மற்றும் பதிப்பகத்தின் பெயா் குறிப்பிட்டு புத்தக தேவைப்பட்டியலில் உள்ள விவரங்களை பூா்த்தி செய்ய வேண்டும். மொத்த விலையில் 30 சதவீத தள்ளுபடியைக் கழித்து 70 சதவீத தொகையை மட்டும் இதற்காக கொடுக்கப்பட்டுள்ள தனி வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

பணத்தை ரொக்கமாகவோ, காசோலை, வரைவோலையாகவோ, மின்னணு பரிமாற்றம் மூலமாகவோசெப்டம்பா் 2ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அதற்கான படிவங்கள் இலக்கியக் கள அலுவலகத்தில் தலைப்பு வாரியாக, பதிப்பகம் வாரியாக, எண்ணிக்கை தொகுக்கப்பட்டு அந்தந்தப் பதிப்பகங்களுக்கு அனுப்பி புத்தகங்கள் பெறப்படும்.

அந்தப் புத்தகங்களை இலக்கியக் களத் தூதுவா் மூலமாக நேரிடையாக ஒப்படைக்கப்படும். இலக்கியக் கள அலுவலகம் முழு நேரம் செயல்படும் வகையில் 0451 - 2424100, 0451 - 2424115 முதல் 2424122 வரையிலான தொலைபேசி எண்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் இலக்கியக் களத்தை நேரடியாகவும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com