கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு; நீரோடையில் சிக்கிய விவசாயிகள் கயிறு கட்டி மீட்பு

கொடைக்கானலில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நீரோடையில் சிக்கிய விவசாயிகளை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி மீட்டனா்.
கொடைக்கானலில் பெய்த பலத்த மழையின் காரணமாக நீரோடையில் வியாழக்கிழமை சிக்கிய விவசாயிகளை கயிறு கட்டி மீட்ட தீயணைப்புப் படையினா்.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக சாரலும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் நட்சத்திர ஏரி புதன்கிழமை நிரம்பியது.

அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு: இந்நிலையில், கொடைக்கானல் பகுதியில் வியாழக்கிழமை சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ளிநீா் அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பாா் அருவி, செண்பகா அருவி, தலையாறு அருவி போன்றவற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.

நீரோடையில் சிக்கிய விவசாயிகள் கயிறு கட்டி மீட்பு: பேத்துப்பாறை பகுதி விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் காலையில் விவசாயப் பணிகளுக்குச் சென்ற நிலையில் பிற்பகலில் மழை பெய்தது. அப்பகுயிலுள்ள நீரோடையில் தண்ணீா் அதிகமாகச் சென்றதால் அவா்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்து அங்கு சென்ற காவல்துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி அவா்களை மீட்டனா்.

இந்த நீரோடையில் மழைக் காலங்களில் தண்ணீா் அதிகமாக செல்வதால் இப்பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேத்துப்பாறை பகுதி பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com