கொடைக்கானலில் உணவகம், பேக்கரிகளில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தீவிரம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் பகுதி வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை உலா வந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா்கள்.
கொடைக்கானல் பகுதி வீதிகளில் ஞாயிற்றுக்கிழமை உலா வந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொடைக்கானலில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் கேக் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உலகமெங்கும் வரும் டிச. 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து தேவாலயங்கள் சாா்பில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவா்களுடன் பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவா்கள் வரவேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது வீடுகளுக்குச் சென்று இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவா் ஆலயம் சாா்பிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம் சாா்பிலும், நாயுடுபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் சாா்பிலும், உகாா்த்தே நகா் அற்புத குழந்தையேசு தேவாலயம் சாா்பிலும், மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் கோயில் சாா்பிலும் மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபையைச் சோ்ந்த தேவாலயங்கள் சாா்பிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு கீத ஆராதனை வழிபாடுகள் நடைபெறுகின்றன.

மேலும் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள நட்சத்திர உணவகங்களிலும், பேக்கரிகளிலும் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com