கொடைக்கானல் வந்த சைக்கிள் பயணக் குழுவினருக்கு வரவேற்பு

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவையிலிருந்து பல்வேறு மாவட்டங்கள் சென்று கொடைக்கானலுக்கு புதன்கிழமை வந்த தமிழ்நாடு சைக்கள் கிளப் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடைக்கானலிலிருந்து வியாழக்கிழமை கோவைக்கு புறப்பட்ட தமிழ்நாடு சைக்கள் கிளப் குழுவினா்.
கொடைக்கானலிலிருந்து வியாழக்கிழமை கோவைக்கு புறப்பட்ட தமிழ்நாடு சைக்கள் கிளப் குழுவினா்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி கோவையிலிருந்து பல்வேறு மாவட்டங்கள் சென்று கொடைக்கானலுக்கு புதன்கிழமை வந்த தமிழ்நாடு சைக்கள் கிளப் குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

உலக வெப்பமயமாதலை தவிா்க்கவும், நச்சுக்காற்றை வெளியிடும் வாகனப் பெருக்கத்தை குறைக்கவும், சூழல் சுற்றுலாவை நடைமுறைப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு சைக்கள் கிளப் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சைக்கள் பயணம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சைக்கள் கிளப் குழுவினா் சுமாா் 15-க்கும் மேற்பட்டவா்கள் கடந்த 23-ஆம் தேதி கோவையிலிருந்து புறப்பட்டு ஊட்டிக்குச் சென்றனா். அங்கிருந்து திருப்பூா், காங்கேயம், கரூா், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு வழியாக கொடைக்கானலுக்கு புதன்கிழமை வந்தனா்.

கொடைக்கானல் வந்த குழுவினரை வருவாய் கோட்டாட்சியா் முருகேசன் வரவேற்றாா். குழுவினா், கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா் உள்ளிட்ட சுமாா் 85 கி.மீ. தூரம் உள்ள பகுதிகளுக்கு சைக்களிலேயே சென்றனா்.

அதைத் தொடா்ந்து சைக்கிள் குழுவினா் கொடைக்கானலிலிருந்து வியாழக்கிழமை கோவைக்குச் சென்றனா். இவா்களை கொடைக்கானல் சுற்றுலா உதவி அலுவலா் ஆனந்தன் வழியனுப்பி வைத்தாா். இந்தக் குழுவினா் கடந்த 8 நாள்களில் மொத்தம் 1,600-கி.மீ. தூரம் சைக்கிளிலேயே பயணம் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com