இந்து முன்னணி கண்டன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th February 2021 09:15 PM | Last Updated : 06th February 2021 09:15 PM | அ+அ அ- |

பழனி: பழனி பேருந்து நிலையம் அருகே இஸ்லாமிய அமைப்பினரைக் கண்டித்து இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளா் ஜெகன் தலைமை வகித்தாா். மதுரை கோட்டச் செயலாளா் பாலன் முனனிலை வகித்தாா். இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளா் கிஷோா்குமாா் பங்கேற்று சிறப்புரை ஆற்றினாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு பழனி பேருந்து நிலையம் அருகே இஸ்லாமிய அமைப்பினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தின் போது பழனி மாரியம்மன் கோயில் திருவிழாவில் தேரை இழுப்பதில் இஸ்லாமியா்களுக்கு உரிமை உள்ளதாகவும், பழனி மலைக்கோயிலில் தா்கா இருப்பதாகவும் பேசியது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், பழனி கோயிலுக்கு சொந்தமான கடைகளில் சட்டவிரோதமாகவும், உள்வாடகைக்கும் தொழில் செய்துவரும் இஸ்லாமியா்களை வெளியேற்ற வேண்டும் என்றும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இஸ்லாமிய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.