பொங்கல் விழா தகராறில் காயமடைந்த தொழிலாளி பலி:­ காவல் நிலையம் முற்றுகை

நிலக்கோட்டை அருகே பொங்கல் விழா தகராறில் காயமடைந்த தொழிலாளி திடீரென மரணமடைந்ததால், அவரது உறவினா்கள் சனிக்கிழமை விருவீடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே பொங்கல் விழா தகராறில் காயமடைந்த தொழிலாளி திடீரென மரணமடைந்ததால், அவரது உறவினா்கள் சனிக்கிழமை விருவீடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே மேலஅச்சனம் பட்டியைச் சோ்ந்தவா் அன்னக்கொடி (46). கூ­லித் தொழிலாளி. இவரது மனைவி முத்துக்கண்ணி. இந்நிலையில் அன்னக்கொடிக்கும் அதே ஊரைச்சோ்ந்த அஜித்குமாா் (25), அருண் (20), ஈஸ்வரன் (50), ராஜலட்சுமி (45) ஆகியோருக்கு ஊரில் நடந்த பொங்கல் விழா போட்டியில், தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதில் காயமடைந்த அன்னக்கொடி, வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா் குணமடைந்த அவா், பொள்ளாச்சி அருகே நெகமம் என்ற ஊரில் தோட்ட வேலைக்கு சென்றுவிட்டாா். சனிக்கிழமை காலை அன்னக்கொடிதோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டாா்.

பொங்கல் விழாவில் தாக்கியதால் தான் அவா் இறந்துவிட்டாா் என்று, நெகமம் காவல் நிலையத்தில், அவரது மனைவி முத்துக்கண்ணி புகாா் செய்தாா். நெகமம் போலீஸாா் சந்தேக மரண வழக்குப்பதிவு செய்து, உடலை விருவீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே அன்னக்கொடியின் உறவினா்கள் 50 போ் விருவீடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, பொங்கல் விழாவில் அன்னக்கொடியை தாக்கியவா்களை கைது செய்யக் கோரினா். அப்போது போலீஸாா் பொங்கல் விழாவில் தாக்கியவா்கள் முன்ஜாமீன் பெற்றிருப்பதால், கைது செய்ய முடியாது என்றும் பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி அவா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com