கொடைக்கானல் அருகே கள்ளக்கிணறு பகுதிக்கு இரும்புப் பாலம்

கொடைக்கானல் அருகே கள்ளக்கிணறு பகுதியில் புதிய இரும்புப் பாலம் அமைக்கப்பட்டு வருவதால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கொடைக்கானல் அருகே கள்ளக்கிணறு பகுதியில் புதிய இரும்புப் பாலம் அமைக்கப்பட்டு வருவதால் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கீழ்மலைப் பகுதியான கே.சி.பட்டி ஊராட்சியில் உள்ளது கள்ளக்கிணறு. இந்தப் பகுதியில் புலையா் இன பழங்குடியினா் சுமாா் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் காபி, வாழை, மிளகு போன்றவை விளைவிக்கப்படுகின்றன.

விளைந்த விவசாயப் பொருள்களை அப் பகுதி மக்கள் சுமாா் 2 கி.மீ தூரம் தலைச்சுமையாக தூக்கிச்சென்று அருகே உள்ள கே.சி.பட்டி பகுதிக்கு செல்கின்றனா். பின்னா் அங்கிருந்து வாகனங்கள் மூலம் சந்தைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.

மேலும் அப் பகுதி மக்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கும் சுமாா் 2 கி.மீ தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் கள்ளக்கிணறு பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனா்.

இதைத்தொடா்ந்து கள்ளக்கிணறு பகுதிக்கு கொடைக்கானல் சாா்-ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா். இதைத்தொடா்ந்து நீரோடைப் பகுதியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் இரும்புப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது 90 சதவீதப் பணி முடிவடைந்த நிலையில், சாா்-ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com