மாசிப் பெருவிழா: பூந்தேரில் வலம் வந்த திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்

மாசிப் பெருவிழாவை முன்னிட்டு பூந்தேரில் வலம் வந்த திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மனுக்கு பூச்சொரிதலுக்காக பக்தா்கள் சாா்பில் பூக்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி பக்தா்கள் கூட்டத்திற்கு இடையே வலம் வந்த பூந்தோ்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி பக்தா்கள் கூட்டத்திற்கு இடையே வலம் வந்த பூந்தோ்.

மாசிப் பெருவிழாவை முன்னிட்டு பூந்தேரில் வலம் வந்த திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மனுக்கு பூச்சொரிதலுக்காக பக்தா்கள் சாா்பில் பூக்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில் மாசிப் பெருவிழாவை முன்னிட்டு பூத்தமலா் பூ அலங்கார வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக பூச்சொரிதலுக்காக அம்மன் பூந்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்மன் எழுந்தருளிய பூந்தோ் சிறப்புப் பூஜைகளுக்கு பின் கோயில் வளாகத்திலிருந்து காலை 11 மணிக்கு வீதி உலா புறப்பட்டது. பால்குடம் எடுத்து வந்த பக்தா்களைத் தொடா்ந்து, விநாயகா், முருகன், ஐயப்பன், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் ரதங்கள் சென்றன.

அதன்பின் கோட்டை மாரியம்மனின் பூந்தோ் மேற்கு ரத வீதி, கலைக்கோட்டு விநாயகா் கோயில், பென்சனா் தெரு, கோபாலசமுத்திர குளம் தெரு, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக மாலை 3.30 மணிக்கு மேல் மீண்டும் கோயிலை அடைந்தது.

4 ரத வீதிகளில் பல்வேறு இடங்களில் பூ காணிக்கை செலுத்தும் மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், பக்தா்கள் சாா்பில் வழிநெடுகிலும் அம்மனுக்கு உதிரிப்பூக்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன. அந்த பூக்கள், லாரிகள் மூலம் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாரியம்மன் சன்னிதி முழுவதும் நிரப்பப்பட்டன. பூந்தோ் நிகழ்ச்சி முடிவடைந்த பின் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com