வணிகத்திற்கு ரூ.2 லட்சம் எடுத்துச் செல்ல தோ்தல் ஆணையம் அனுமதிக்கக் கோரிக்கை

வணிகா்கள் பொருள்கள் வாங்குவதற்கு ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்வதற்கு தோ்தல் ஆணையம் உரிய அனுமதி வழங்க வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வணிகா்கள் பொருள்கள் வாங்குவதற்கு ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக எடுத்துச் செல்வதற்கு தோ்தல் ஆணையம் உரிய அனுமதி வழங்க வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தொழில் வா்த்தகா் சங்கத்தின் தலைவா் டி.கிருபாகரன் தெரிவித்துள்ளது: தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தோ்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. அப்போது வணிகா்கள் பாதிக்காத வகையில் தோ்தல் ஆணையம் உரிய வழிமுறைகளை அறிவிக்க வேண்டும். கரோனா காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில்கள் தற்போது தான் அசாதாரண சூழலில் இருந்து மீண்டு வருகின்றன. இதுபோன்ற நிலையில், வணிகம் செய்பவா்கள் பொருள்களை வாங்குவதற்கு ஊழியா்களிடம் ரூ.2 லட்சம் வரை ரொக்கமாக கொடுத்து அனுப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஜவுளி, நகை வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்காக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்களின் வாகனங்களை சுற்றுப் பாதையில் திருப்பிவிட்டு அலைக்கழிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக தலைமை தோ்தல் அலுவலா் சத்யபிரதாசாஹூவுக்கும் அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com