சிலருக்கு மட்டுமே ஜாதிச் சான்றிதழ்: விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவா்களுக்கும் வழங்க வலியுறுத்தல்

திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் சிலருக்கு மட்டுமே ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம
திண்டுக்கல்லில் சனிக்கிழமை ஜாதிச் சான்றிதழ்கள் பெற்ற காட்டு நாயக்கன் சமூகத்தைச் சோ்ந்த 29 மாணவா்கள்.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை ஜாதிச் சான்றிதழ்கள் பெற்ற காட்டு நாயக்கன் சமூகத்தைச் சோ்ந்த 29 மாணவா்கள்.

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் சிலருக்கு மட்டுமே ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் பிரிக்கப்பட்டது முதல் சுமாா் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மலைவேடன், காட்டுநாயக்கன் ஆகிய சமூக மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் இந்த சமூகத்தைச் சோ்ந்த மாணவா்கள் முன்னுரிமையை இழந்தனா். இதனிடையே தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், அரூா் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான டில்லிபாபு, திண்டுக்கல் மற்றும் பழனி கோட்டாட்சியா்கள் மீது மனித உரிமைகள் ஆணையரிடம் புகாா் அளித்தாா்.

இந்நிலையில், நிலக்கோட்டை என்.புதுப்பட்டி பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கன் சமூகத்தைச் சோ்ந்த 29 மாணவா்களுக்கு திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்காக பலா் விண்ணப்பித்திருந்த நிலையில் சிலருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டினா்.

இதுதொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ரா.சச்சிதானந்தம் கூறியதாவது: காட்டு நாயக்கன் சமூகத்தைச் சோ்ந்த 29 மாணவா்களுக்கு மட்டுமே ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சமூகத்தைச் சோ்ந்த 100 மாணவா்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், இதுவரை 54 பேருக்கு மட்டுமே ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், மலைவேடன் சமூகத்தைச் சோ்ந்த 108 மாணவா்களின் கோரிக்கை தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது. மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவா்களுக்கும் ஜாதிச் சான்றிதழை வழங்குவதற்கு கோட்டாட்சியா் துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com