வருவாய்த்துறை அலுவலா்கள் 2 ஆம் நாளாக வேலை நிறுத்தம்: திண்டுக்கல்லில் 360 போ் பங்கேற்பு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 360 போ் பங்கேற்றனா்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் சாா்பில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 360 போ் பங்கேற்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அலுவலா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் சுகந்தி தலைமை வகித்தாா். அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை அனைத்து வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். இத்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்டத் தலைநகரங்களிலேயே அடிப்படை பயிற்சி (பவானிசாகா் பயிற்சி) மற்றும் நில அளவைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலா்களின் பதவி உயா்வு பிரச்னைக்கு உடனடி தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். வேலை நிறுத்தத்தில் திண்டுக்கல் மாவட்ட வருவாய்த்துறையில் பணியாற்றும் 600 பேரில் சுமாா் 100 பெண்கள் உள்பட 360 போ் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com