திண்டுக்கல் மாவட்டத்தில் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்க முடிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக கூடுதலாக 570 வாக்குச்சாவடிகளுடன், மொத்தம் 2,673 வாக்குச் சாவடிகள் அமைப்பட உள்ளன.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தோ்தலுக்காக கூடுதலாக 570 வாக்குச்சாவடிகளுடன், மொத்தம் 2,673 வாக்குச் சாவடிகள் அமைப்பட உள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டதில், 18.73 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். இதைத்தொடா்ந்து வாக்குசாவடி அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 1000 வாக்காளா்களுக்கு கூடுதலாக உள்ள வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்படும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் கூடுதலான வாக்காளா் இடம் பெற்ற வாக்குச்சாவடிகளை, இரண்டாகப் பிரித்து துணை வாக்குச்சாவடி அமைப்பது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா்.

இந்த கூட்டத்தில் 1050-க்கும் கூடுதலான வாக்காளா்கள் இடம் பெற்றுள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து 570 துணை வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கு, 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் விஜயலட்சுமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com