மோட்டாா் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

மோட்டா் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

மோட்டா் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 2020-21ஆம் நிதியாண்டுக்கு கால்கள் பாதிக்கப்பட்ட, காது கேளாத மற்றும் வாய் பேசாத, மிதமான மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளா்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளியின் தாய்மாா்களுக்கு மோட்டாா் பொருத்திய இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

18 முதல் 45 வயதுக்குள்பட்ட தையல் பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதம் மனவளா்ச்சி குன்றியோரின் தாய்மாா்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், தையல் பயிற்சி சான்று, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பிப்.28 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்கள் பெற 0451-2460099 என்ற எண்ணில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com