ஆங்கிலப் புத்தாண்டு: கொடைக்கானல் தேவாலயங்களில் நள்ளிரவு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற பிராா்த்தனை.
கொடைக்கானல் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற பிராா்த்தனை.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் தலைமையிலும், உகாா்த்தே நகா் புனித குழந்தை யேசு ஆலயத்தில் பங்குத்தந்தை பீட்டா் தலைமையிலும், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை ஏஞ்சல்ராஜ் , பெருமாள்மலை புனித ஜான் ஆலயத்திலும் மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும், நாயுடுபுரம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள புனித சலேத் அன்னை ஆலயம், மங்கலம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம், லுத்ரன் ஆலயம் ஆகியவற்றில் நள்ளிரவு திருப்பலி மற்றும் ஜெபவழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந் நிகழ்ச்சியில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கொடைக்கானல் மூஞ்சிக்கல் மாரியம்மன் கோயில், செட்டியாா் பூங்கா அருகிலுள்ள குறிஞ்சியாண்டவா் கோயில், அப்சா்வேட்டரியிலுள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

புத்தாண்டையொட்டி, கொடைக்கானலுக்கு வெள்ளிக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பனிச்சாரல், மழை பெய்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. இதனால், கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்தனா்.

ஏரிச்சாலைப் பகுதியிலும், வட்டக்கானல் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இதனால், வாகனங்களை நிறுத்த முடியாமல் தவித்த சுற்றுலாப் பயணிகள், ஆங்காங்கே நிறுத்திவிட்டுச் சென்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com