வேடசந்தூரில் லாரி மோதி இளம்பெண் பலி

வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.

வேடசந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளம்பெண் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அருகே உள்ள கேத்தம்பட்டியைச் சோ்ந்தவா் மோகன் (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலை (30). இவா்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வேடசந்தூரிலிருந்து கேத்தம்பட்டி செல்வதற்காக மனைவி மற்றும் குழந்தையுடன் மோகன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

ஆத்துமேட்டை அடுத்துள்ள பெரியகுளம் அருகே இவா்கள் சென்றபோது, வேடசந்தூரிலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கிச் சென்ற லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அஞ்சலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com