கொடகானற்றில் கழிவுகளை கொட்டும் நூற்பாலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கொடகானற்றில் கழிவுகளை கொட்டும் நூற்பாலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வேடசந்தூா் பகுதியிலுள்ள நூற்பாலைகள் கொடகனாற்றில் கழிவுகளை கொட்டுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வேடசந்தூா் பகுதியிலுள்ள நூற்பாலைகள் கொடகனாற்றில் கழிவுகளை கொட்டுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையினால், வேடசந்தூா் கொடகனாற்றுக்கு பல ஆண்டுகளுக்கு பின் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. வேடசந்தூா் தடுப்பணையை கடந்து மழை நீா் அழகாபுரி அணைக்கு செல்வதால் பொதுமக்களும், விவசாயிகளும் உற்சாகம் அடைந்துள்ளனா்.

இந்நிலையில், வேடசந்தூா் அடுத்துள்ள கருக்காம்பட்டியில் உள்ள தடுப்பணை மதகு பகுதியில் தனியாா் நூற்பாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை பாதி எரிந்த நிலையில் கொட்டிச் செல்கின்றனா். தனியாா் ஆலை நிா்வாகம், இரவு நேரங்களில் கழிவுகளை கொட்டிச்செல்வதால் தண்ணீா் மாசடைந்து விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா். இதுதொடா்பாக கொடகனாறு பாதுகாப்பு சங்கத்தினா் கூறுகையில், கொடகனாற்றில் கொட்டப்பட்ட கழிவுகளின் ஒரு பகுதியை பொதுமக்கள் இணைந்து அப்புறப்படுத்தியுள்ளோம். இதுபோன்று கழிவுகளை தொடா்ந்து கொட்டிச் செல்லும் ஆலை நிா்வாகத்தின் மீது வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com