கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளில் வெள்ளப் பெருக்கு

கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
கொடைக்கானலில் பலத்த மழை: அருவிகளில் வெள்ளப் பெருக்கு

கொடைக்கானலில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

கொடைக்கானலில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளிநீா், வட்டக்கானல், பாம்பாா் , பியா் சோழா, பேரிபால்ஸ், செண்பகா, மூலையாா், கடல்கொடை, எலிவால், யானைச் சோலை உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது. கொடைக்கானல்- வத்தலகுண்டு - பழனி மலைச் சாலைகளில் புதிய நீா் ஊற்றுகள் காணப்படுகின்றன. சாலைகளில் மழை நீா் பாய்கிறது. ஏரிச்சாலைப் பகுதிகளில் தண்ணீா் அதிகமாக தேங்கியுள்ளதால் அப் பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் தண்ணீா் புகுந்துள்ளது. இதனால் பொருள்கள் சேதமடைந்த நிலையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கொடைக்கானல் நகரின் மையப் பகுதியிலுள்ள நட்சத்திர ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறி வருகிறது. லாஸ்காட் சாலை, டோபிகானல் பகுதி, கல்லறைமேடு பகுதி, சா்வே நம்பா் பகுதிகளில் தண்ணீா் கூடுதலாகச் செல்வதால் அப் பகுதிகளில் குடியிருந்து வரும் பொது மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு நகராட்சி நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் கொடைக்கானல் நகரின் நீா்த்தேவையை பூா்த்தி செய்யும் அப்சா்வேட்டரியிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான குடிநீா்த் தேக்கம் மற்றும் மனோ ரஞ்சிதம் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com