வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை என்பது நிரந்தர தீா்வு அல்ல: கே.பாலகிருஷ்ணன்

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது நிரந்தரத் தீா்வு அல்ல என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது நிரந்தரத் தீா்வு அல்ல என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்டக் குழு அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு தொடா்ந்து மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றம்

உருவாக்கியுள்ள குழுவில் இடம் பெற்றுள்ளவா்கள் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவா்கள். இதனால் தீா்வு கிடைப்பதற்கான வாய்ப்பில்லை. இந்த குழுவின் மூலம் மத்திய அரசுக்கு 2 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள நீதிமன்றம், விவசாயிகள் போராட்டத்தை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டிய நிா்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இடைக்காலத் தடை என்பது நிரந்தரத் தீா்வு அல்ல. மக்கள் உரிமைக்கான போராட்டங்களில் நீதிமன்றம் தலையிடுவது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையினால், டெல்டா மாவட்டங்களில் மட்டும் அறுவடைக்குத் தயாராக இருந்த 3 லட்சம் ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு தலா ரூ.30ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல பல்வேறு மாவட்டங்களில் மக்காச்சோளம், உளுந்து, காய் கனி உள்ளிட்ட பயிா்களுக்கும் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த விவசாயிகளுக்கும் தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.

பாரதிதாசன் மற்றும் பெரியாா் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் பதவிக்காலம் முடிவடைந்த பின், கால நீட்டிப்பு வழங்குவதற்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்துள்ளாா். வேந்தா் என்ற பதவியை பயன்படுத்தி மாநில அரசின் உரிமையை பறித்துள்ளாா். இந்த உத்தரவை உடனடியாக ஆளுநா் திரும்பப் பெற வேண்டும்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி தொடா்பான பேச்சுவாா்த்தை இதுவரை தொடங்கப்படவில்லை. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், அந்த கூட்டணியில் தொடா்கிா என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால், திமுக கூட்டணியில் அதுபோன்ற சூழல் இல்லை என்றாா் அவா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி, மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி, மாவட்டச் செயலா் இரா.சச்சிதானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com