நெய்க்காரபட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி

பழனி அருகே நெய்க்காரபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 450-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட வீரா்களும் பங்கேற்றனா்.
நெய்க்காரப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற வீரா்.
நெய்க்காரப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற வீரா்.

பழனி: பழனி அருகே நெய்க்காரபட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 450-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட வீரா்களும் பங்கேற்றனா்.

நெய்க்காரபட்டியில் ஹைகோா்ட் காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதல்காளையாக கோயில் காளையும் அதன்பின்னா் மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசல் வழியாக சுமாா் நானூறுக்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டு அவைகளை அடக்கினா்.

இதில் மாடுகளைப் பிடித்த வீரா்களுக்கும், பிடிபடாத மாடுகளுக்காக அதன் உரிமையாளா்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி நாணயம், கட்டில், பீரோ, குடம், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் 29 மாடுபிடி வீரா்களுக்கு காயங்கள் ஏற்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியை பழனி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா், கோட்டாட்சியா் அசோகன், காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, ஆய்வாளா் வீரகாந்தி மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் கண்டுகளித்தனா். விழாவில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் ஊா்க்காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

முன்னதாக வீரா்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்த பின்னரே காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com