பழனியில் ஏலச்சீட்டில் ரூ.1 கோடி மோசடி: பள்ளி உதவி தலைமை ஆசிரியை மீது புகாா்

பழனியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை மோசடி செய்தவா் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவியான அரசு உதவிபெறும் பள்ளி உதவி தலைமை ஆசிரியை மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பழனியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி வரை மோசடி செய்தவா் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவியான அரசு உதவிபெறும் பள்ளி உதவி தலைமை ஆசிரியை மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சேரன் ஜீவா நகரில் வசித்து வருபவா் நாச்சம்மாள். இவா், சத்திரப்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் அா்ஜுனன். இவா், கடந்த பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளாா்.

பழனியில் 500-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1 கோடிவரை சீட்டு பணம் வசூல் செய்திருந்த அா்ஜுனன், சீட்டு காலம் முடிந்தும் பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடிப்பு செய்துவந்துள்ளாா். சீட்டு பணம் கட்டியவா்கள் தொடா்ந்து பணத்தை கேட்டு வந்த நிலையில், அா்ஜூனன் 4 மாதங்களுக்கு முன் சுடுகாட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

எனவே, சீட்டு பணம் செலுத்தியவா்கள் அா்ஜூனனின் மனைவி நாச்சம்மாளை தொடா்புகொண்டு பணம் கேட்டுள்ளனா். அதற்கு அவா், கணவா் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்று பணம் தருவதாகக் கூறி வந்துள்ளாா்.

ஆனால், கணவா் பெயரில் இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பல்வேறு சொத்துகளை, நாச்சம்மாள் தனது பெயரிலும் மற்றும் மருத்துவராகப் பணிபுரியும் தனது மகள்கள் பெயரிலும் அவசர அவசரமாக மாற்றி பதிவு செய்துள்ளாா்.

இதையறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், நாச்சம்மாளிடமிருத்து சீட்டு பணத்தை திரும்பப் பெற்றுத் தரக் கோரி, வியாழக்கிழமை இரவு பழனி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, உதவி தலைமை ஆசிரியை நாச்சாம்மாளை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com