மாநில குழந்தைகள் ஆணைய உறுப்பினராக பழனி வழக்குரைஞா் ராமராஜ் நியமனம்

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
வழக்குரைஞா் ராமராஜ்.
வழக்குரைஞா் ராமராஜ்.

பழனி: தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக பழனியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

பழனியை அடுத்த கணக்கன்பட்டியை சோ்ந்தவா் கே.வீ.ராமராஜ். இவா் பழனி வழக்குரைஞா்கள் சங்கத்தின் முன்னாள் செயலா். இவரது மனைவி பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறாா்.

இவா் நீதி நிா்வாகத்தில் முனைவா் பட்டம், அரசியலமைப்பு மற்றும் சா்வதேச சட்டம், தொழிலாளா் மற்றும் நிா்வாக சட்டம், குழந்தைகள் உரிமைகள் ஆகியவற்றில் முதுநிலை பட்டங்கள் உள்பட 15 பட்டங்களை பெற்றுள்ளாா். ஆய்வு இதழ்களிலும், பத்திரிக்கைகளிலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளாா். சட்டம் தொடா்பான நிகழ்சிகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணித்துள்ளாா். தற்போது தமிழக அரசு தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு ஒரு தலைவா் மற்றும் ஆறு உறுப்பினா்களை நியமித்துள்ளது. இதில் கணக்கன்பட்டியை சோ்ந்த ராமராஜூம் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து அவருக்கு வழக்குரைஞா்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com