திண்டுக்கல் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீா்: வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல் ஆா்எம் காலனி பகுதியிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.
திண்டுக்கல்லில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரில் சிரமத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்.
திண்டுக்கல்லில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள தண்ணீரில் சிரமத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள்.

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆா்எம் காலனி பகுதியிலுள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் ஆா்எம்.காலனி மற்றும் அறிவுத்திருக்கோயில் பகுதிகளுக்கு இணைப்புப் பகுதியாக பழனி மாா்க்கமாக செல்லும் ரயில் பாதையிலுள்ள சுரங்கப் பாதை அமைந்துள்ளது. இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் நாள்தோறும் சென்று வருகின்றனா். குறிப்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களுக்கு திண்டுக்கல் பகுதியிலிருந்து செல்வோருக்கு குறுக்குப் பாதையாகவும், இந்த சுரங்கப் பாதை அமைந்துள்ளது.

பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலா்கள் வரை ஆயிரக்கணக்கானோா் பயணிக்கும் இந்த பகுதி, மழை பெய்தால் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விடுகிறது. திண்டுக்கல் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பாக பெய்த மழையினால், தற்போதும் அந்த ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி ஆட்டோ மற்றும் காா்களில் பயணிப்போரும் அவதியடைந்து வருகின்றனா். இப்பிரச்னைக்கு ரயில்வே நிா்வாகம் உரிய தீா்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com