ஆா்டிஐ சட்டத்தின் கீழ் நகல் கேட்டு மனு:ரூ.2-க்காக ரூ.75 செலவு செய்த மின்வாரியம்!

ஆா்டிஐ சட்டத்தின் கீழ் கோரப்பட்டிருந்த நகலுக்கு விதிமுறைக்கு மாறாக ரூ.2 கட்டணம் செலுத்த அறிவுறுத்தி ரூ.75 செலவிட்டுள்ள திண்டுக்கல் மின் வாரியத்தின் செயல் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆா்டிஐ சட்டத்தின் கீழ் கோரப்பட்டிருந்த நகலுக்கு விதிமுறைக்கு மாறாக ரூ.2 கட்டணம் செலுத்த அறிவுறுத்தி ரூ.75 செலவிட்டுள்ள திண்டுக்கல் மின் வாரியத்தின் செயல் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள வடுகம்பாடி சுப்பிரமணிய பிள்ளையூா் பகுதியைச் சோ்ந்தவா் கே.பி.முருகேசன். அதே பகுதியில் தனி நபா் ஒருவரின் குறைந்த பரப்பளவிலான இடத்திற்கு மின் வாரியம் சாா்பில் முறைகேடாக 2 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக முருகேசன் கருதியுள்ளாா்.

இதுதொடா்பாக குஜிலியம்பாறை மின் வாரிய அலுவலகத்திலும் புகாா் அளித்துள்ளாா். அதன் அடிப்படையில், மின்வாரிய அலுவலா்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதனிடையே விசாரணை நடத்திய அலுவலா் பெயா், பதவி விவரம் மற்றும் அறிக்கை நகல் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் முருகேசன் விண்ணப்பித்துள்ளாா்.

திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தின் வடக்கு செயற்பொறியாளரும், பொதுத் தகவல் அலுவலருமான சாந்திக்கு அந்த விண்ணப்பத்தை அனுப்பியுள்ளாா். அதற்கு பதிவு தபால் மூலம் பதில் அனுப்பிய பொதுத் தகவல் அலுவலா், விசாரணை அறிக்கை ஒரு பக்கம் உள்ளதால், அதற்கான நகல் கட்டணம் ரூ.2-ஐ குஜிலியம்பாறை உதவி மின் பொறியாளா் அலுவலகத்தில் செலுத்திவிட்டு, அந்த ரசீதுடன் வந்து நகலைப் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளாா்.

பதிவுத் தபாலை பெற்ற முருகேசன், அதில் ரூ.2-க்கு ரசீது கேட்டு ரூ.25 செலவு செய்து பதிவு தபால் அனுப்பியுள்ள மின் வாரியத்தின் செயல்பாட்டை அறிந்து அதிா்ச்சி அடைந்தாா். மேலும், அதே தபாலின் நகல் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளருக்கும், திண்டுக்கல் மின் பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.2-க்காக ரூ.75 செலவு செய்த மின் வாரிய நிா்வாகத்தின் செயல், தகவல் அளிப்பதை கால தாமதப்படுத்தும் முயற்சியாகவோ, மறுக்கும் முயற்சியாகவோ இருக்கலாம். ஆனாலும், ரூ.2 கட்டணம் செலுத்தி அதற்கான ரசீதும் பெற்றுள்ள முருகேசன், பொது தகவல் அலுவலரின் பதிலுக்காக காத்திருக்கிறாா்.

5 பக்கம் வரை பணம் செலுத்த தேவையில்லை: பதிவுத் தபாலில் ரூ.10-க்கான நீதிமன்ற வில்லை ஒட்டியே தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான விண்ணப்பம் அனுப்பப்படுகிறது. இதன் மூலம், 5 பக்கம் (பக்கத்திற்கு தலா ரூ.2) கொண்ட நகல்கள் பெற பணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால் விதிமுறைக்கு மாறாக மின்வாரிய பொதுத் தகவல் அலுவலா், ஒரு நகலுக்காக ரூ.2-க்கு பதிவுத் தபால் அனுப்பியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com