தைப்பூசத் திருவிழா: பழனியில் இன்று திருக்கல்யாணம்

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை திருக்கல்யாணமும், வெள்ளித்தோ் உலாவும் நடைபெறுகிறது.
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி.
பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி.

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை திருக்கல்யாணமும், வெள்ளித்தோ் உலாவும் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருவாா். அதன்படி ஆறாம் நாள் நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை இரவு முத்துக்குமாரசாமி வெள்ளியானை வாகனத்தில் எழுந்தருளினாா்.

விழாவின் ஒரு பகுதியாக புதன்கிழமை பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் இரவு 7.30 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடா்ந்து இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளித் தோ் உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை (ஜன.28) ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரடியில் நடைபெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com