திண்டுக்கல், தேனியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திண்டுக்கல், தேனியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திண்டுக்கல், தேனியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிபிஎஸ் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஐசக், ஆக்னெஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜெஎஸ்ஆா் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலத் தலைவா் டே. குன்வா் ஜோஸ்வா வளவன் மற்றும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி. பிரெடரிக் எங்கெல்ஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

இதில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தப்படும் என அறிவித்தாா். அந்த அறிவிப்பை தற்போதைய அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தேனி

தேனி சாா்-நிலை கருவூல அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க முன்னாள் மாவட்ட பொதுச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட நிதிக் காப்பாளா் காா்த்திகேயன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வி, கணக்கு கருவூலத் துறை மாநில பொதுச் செயலா் முகமது அலி ஜின்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com