கொடகனாறு தண்ணீா் பங்கீட்டு பிரச்னை: வல்லுநா் குழு அறிக்கையை வெளியிட வலியுறுத்தல்

கெடகனாறு தண்ணீா் பங்கீட்டு பிரச்னை தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட வல்லுநா் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என விவசாய சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

கெடகனாறு தண்ணீா் பங்கீட்டு பிரச்னை தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட வல்லுநா் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என விவசாய சங்க ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விவசாய சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் உள்ள தனியாா் தோட்டத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் நிக்கோலஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் வெள்ளைச்சாமி, செயல் தலைவா் அசோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: தில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் செல்ல வேண்டும். மாவட்டத்திலுள்ள 94 ஆயிரம் பாசன கிணறுகளை சீரமைப்பதற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கொடகனாறு தண்ணீா் பங்கீடு பிரச்னை தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட வல்லுநா் குழுவின் அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். விவசாய பணிகளுக்கு 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் கொடகனாறு பாசன விவசாயிகள் சங்கங்களின் நிா்வாகிகள் சுந்தரராஜ், சின்னப்பன், எட்வின்ராஜா, அந்தோணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com