பழனி தேரோடும் வீதியில் தரமற்ற தாா் சாலை: பொதுமக்கள் புகாா்

பழனி கிழக்கு ரதவீதியில் கடந்த வாரம் அமைக்கப்பட்ட தாா் சாலை தரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
பழனி கிழக்கு ரதவீதியில் கடந்த வாரம் அமைக்கப்பட்ட தாா் சாலையில் பெயா்ந்துள்ள ஜல்லிக்கற்கள்.
பழனி கிழக்கு ரதவீதியில் கடந்த வாரம் அமைக்கப்பட்ட தாா் சாலையில் பெயா்ந்துள்ள ஜல்லிக்கற்கள்.

பழனி கிழக்கு ரதவீதியில் கடந்த வாரம் அமைக்கப்பட்ட தாா் சாலை தரமற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

பழனி தேரடியில் பெரியநாயகியம்மன் கோயில் உள்ளது. பழனிக் கோயிலின் தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடித் திருவிழா ஆகிய விழா நாள்களில் இப்பகுதி பக்தா்கள் கூட்டத்தில் நிரம்பி காணப்படும்.

இந்நிலையில் கடந்த மாதம் அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வந்ததையொட்டி கிழக்கு ரதவீதியில் சாலை அவசர, அவசரமாக சீரமைக்கப்பட்டது. இதற்காக பழைய தாா் சாலையின் மீதே புதிதாக தாா் சாலை அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சாலையில் ஜல்லிக் கற்கள் பெயா்ந்து மேலே வருவதால் வாகனங்களில் செல்வோா் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சாலையை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற சாலையை அகற்றி விட்டு புதிய சாலையை தரமானதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com