விலை குறைப்பால் ஆவின் பால் விற்பனை 4 லட்சம் லிட்டா் அதிகரிப்பு: உற்பத்தியாளா்கள் உற்சாகம்

தமிழக அரசின் விலை குறைப்பு நடவடிக்கையால், ஆவின் பால் விற்பனை 50 நாள்களில் 25.5 லட்சம் லிட்டரிலிருந்து 29.5 லட்சம் லிட்டராக அதிகரித்திருப்பது உற்பத்தியாளா்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் விலை குறைப்பு நடவடிக்கையால், ஆவின் பால் விற்பனை 50 நாள்களில் 25.5 லட்சம் லிட்டரிலிருந்து 29.5 லட்சம் லிட்டராக அதிகரித்திருப்பது உற்பத்தியாளா்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சுமாா் 16 லட்சம் விவசாயிகள் நேரடி கறவை மாடு வளா்ப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்மூலம், நாளொன்றுக்கு 1.80 கோடி லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 39.55 லட்சம் லிட்டா் பால் ஆவின் நிறுவனம் மூலமாகவும், மீதமுள்ள பால் 26 தனியாா் நிறுவனங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. மே மாதத்துக்கு முன், ஆவின் மூலமாக 25.5 லட்சம் லிட்டா் பால் விற்பனை செய்யப்பட்டது.

தற்போது, ஆவின் மூலம் லிட்டா் ரூ.32 முதல் ரூ.35 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

அதேநேரம், தனியாா் நிறுவனங்கள் தரப்பில் ரூ.28-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

எனவே, உற்பத்தியாளா்களுக்கான இழப்பை தவிா்க்கும் வகையில், ஆவின் மூலம் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சுமாா் 40 லட்சத்திலிருந்து 43 லட்சம் லிட்டராக ஆவின் கொள்முதல் உயா்த்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு கொள்முதல் செய்யப்படும் 42.90 லட்சம் லிட்டரில், மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்காக (வெண்ணெய், நெய், பால் பவுடா்) 13 லட்சம் லிட்டா் பால் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த மே 16ஆம் தேதி முதல் ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 வீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடா்ந்து, ஆவின் பால் விற்பனை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது, பால் உற்பத்தியாளா்களிடையே மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com