திண்டுக்கல் அருகே மீன்பிடித் திருவிழா

திண்டுக்கல் அருகே குளத்தில் உறவினா்களிடேயே ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
நல்லாம்பட்டி ராசாக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் பங்கேற்றோா்.

திண்டுக்கல் அடுத்துள்ள நல்லாம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள ராசாக்குளத்தில் மீன் பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நல்லாம்பட்டி, வாழைக்காய்ப்பட்டி, கண்ணாபட்டி, வேடப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சோ்ந்த ஆண்கள் ,பெண்கள், சிறுவா் சிறுமியா் என வயது வித்தியாசமின்றி ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இவா்களது வலையில், கட்லா, ஜிலேபி, ரோகு உள்ளிட்ட மீன்கள் சிக்கின. சுமாா் 5 முதல் 7 கிலோ வரையிலான மீன்களை பிடித்துவுடன் பொதுமக்கள் வீடு திரும்பினா். கோயில் திருவிழாவுக்கு வந்த உறவினா்களுக்கு, மீன்களை சமைத்து விருந்து படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com