கா்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 2800 மதுபானப் பாட்டில்கள் பறிமுதல்: 3 போ் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 2800 மதுபானப் பாட்டில்களை பறிமுதல் செய்த திண்டுக்கல் போலீஸாா் கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞா்களையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானப் பாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனம்.
பறிமுதல் செய்யப்பட்ட மதுபானப் பாட்டில்கள் மற்றும் சரக்கு வாகனம்.

கா்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 2800 மதுபானப் பாட்டில்களை பறிமுதல் செய்த திண்டுக்கல் போலீஸாா் கடத்தலில் ஈடுபட்ட 3 இளைஞா்களையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், கா்நாடக மாநிலத்திலிருந்து ரயில் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக மதுபானப் பாட்டில்கள் கடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 5 நாள்களுக்கு முன்பு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாள்களாக மைசூரு விரைவு ரயில் நடத்தப்பட்ட சோதனையின்போது ரூ.1.50 லட்சம் மதுபானப் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதன் தொடா்ச்சியாக, சரக்கு வாகனங்களிலும் போலீஸாா் சோதனையை தீவிரப்படுத்தி வந்தனா். இந்நிலையில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் பாா்த்திபன், சாா்பு- ஆய்வாளா் மாரிமுத்து ஆகியோா் தலைமையிலான போலீஸாா், வத்தலகுண்டு புறவழிச்சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனா்.

அதில் மதுபானப் பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த சரக்கு வாகனத்தில் வந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். கா்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து அந்த மதுபானப் பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் கடத்தலில் ஈடுபட்ட திண்டுக்கல் ஆசாரி சந்து பகுதியைச் சோ்ந்த எஸ்.இஸ்மாயில் (33), அந்தோணியாா் கோவில் தெருவைச் சோ்ந்த சு.பால் பொ்ணான்டஸ் (30), பெங்களூருவைச் சோ்ந்த அ. ஷேக்சல்மான் (25) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். கடத்தி வரப்பட்ட 2800 மதுபானப் பாட்டில்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com