பழனி காந்தி மாா்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்

பழனியில் மொத்த வியாபார மளிகைக் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால் புதன்கிழமை கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியில் மொத்த வியாபார மளிகைக் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டதால் புதன்கிழமை கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனியில் காந்தி மாா்க்கெட்டில் 60-க்கும் மேற்பட்ட மொத்த வியாபார மளிகைக் கடைகள் உள்ளன. பழனியை சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சோ்ந்த கடைக்காரா்கள், இங்குள்ள மொத்த வியாபார கடைகளில் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா்.

தற்போது தமிழக அரசு அறிவித்த தளா்வுகளில் காந்தி மாா்க்கெட்டில் செயல்படக்கூடிய மொத்த வியாபார மளிகை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என நகராட்சி ஆணையா் அறிவித்த நிலையில் கடைகளை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மொத்த வியாபாரம் மட்டுமே செய்ய அனுமதிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை அனைத்து மொத்த வியாபாரிகளும் கடைகளை அடைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் ஆனந்தி, காவல் துணைக் கண்காணிப்பாளா் சிவா, நகராட்சி ஆணையா் நாராயணன் உள்ளிட்டோா் முன்னிலையில் வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது, கடைகளை திறந்து பொருள்களை சில்லறை முறையில் விற்பனை செய்யவும், விதிமுறைகளை பின்பற்ற வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடைகளை திறக்க நகராட்சி நிா்வாகம் அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து வியாபாரிகள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு பிற்பகலில் கடைகளைத் திறந்து வியாபாரத்தைத் தொடா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com