பழனியில் வணிகா்களுக்கு தடுப்பூசி முகாம்

பழனியில் அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் திங்கள்கிழமை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வணிகா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
பழனி பாண்டிய வேளாளா் மடத்தில் திங்கள்கிழமை அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் நடைபெற்ற தடுப்பூசி போடும் முகாம்.

பழனியில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வணிகா்கள் கடைகள் நடத்தி வருகின்றனா். இவா்கள் பொதுமக்களுடன் நேரடியாக தொடா்பில் உள்ளதால் அவா்கள் நலனுக்காகவும், நுகா்வோா் நலனுக்காகவும் தடுப்பூசி போட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பழனி பாண்டிய வேளாளா் மடத்தில் செவ்வாய்க்கிழமை வணிகா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பழனி அனைத்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் நடைபெற்ற முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க நிா்வாகிகள் ஜே.பி. சரவணன், கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் வகாப் வாழ்த்துரை வழங்கினாா்.

நூற்றுக்கும் மேற்பட்ட வணிகா்கள் தங்களது குடும்பத்தினருடன் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். நிகழ்ச்சியில் சங்க செயலா் காா்த்திகேயன், ஜெகதீஸ், திமுக வாா்டு நிா்வாகிகள் பாஸ்கரன், வீரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com