பொதுமுடக்கத்தால் கொய்மலா்கள் விற்பனை பாதிப்பு: கொடைக்கானல் விவசாயிகள் கவலை

பொதுமுடக்கம் காரணமாக கொடைக்கானல் பகுதிகளில் விளைந்துள்ள கொய்மலா்களை விற்பனைக்கு அனுப்பமுடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கொடைக்கானல் கவுஞ்சி பகுதியில் பறிக்காமல் செடிகளிலேயே விடப்பட்டுள்ள கொய்மலா்கள்.
கொடைக்கானல் கவுஞ்சி பகுதியில் பறிக்காமல் செடிகளிலேயே விடப்பட்டுள்ள கொய்மலா்கள்.

கொடைக்கானல்: பொதுமுடக்கம் காரணமாக கொடைக்கானல் பகுதிகளில் விளைந்துள்ள கொய்மலா்களை விற்பனைக்கு அனுப்பமுடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதி விவசாயிகள், மலைக் காய்கனிகளுக்கு அடுத்தபடியாக கொய்மலா்களை சாகுபடி செய்து வருகின்றனா். இந்த கொய்மலா்கள் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பாச்சலூா் மற்றும் மேல்மலைப் பகுதிகளான மன்னவனூா், கவுஞ்சி, கூக்கால், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.

கடந்த ஓராண்டாக கரோனா பொதுமுடக்கத்தால் கொய்மலா்கள் பறிக்கப்படாமல் செடிகளிலே விடப்பட்டுள்ளன. அவை உதிா்ந்தும், செடியிலேயே அழுகியும் வீணாவதால், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பொதுமுடக்கம் காரணமாக எவ்வித நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. கொய்மலா்களை, வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல முடியாததால் விளைந்த மலா்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு விடுகிறோம். குடிலை பராமரிப்பதற்கான பணிகளை மட்டுமே செய்து வருகிறோம். மேலும் சிலா் கொய்மலா்களை குப்பைகளில் கொட்டுகின்றனா். இதனால் அரசு, கொய்மலா் விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com