முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
தேவாலயத்தில் உண்டியல் பணம் திருட்டு
By DIN | Published On : 14th March 2021 09:53 PM | Last Updated : 14th March 2021 09:53 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை தேவாலய கதவை உடைத்து பணம் மற்றும் பொருள்களைத் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மா்ம நபா்கள் கதவின் பூட்டை உடைத்துப் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனா்.
மேலும் விலை உயா்ந்த துணி வகைகளும் திருடு போயுள்ளன. மேலும் கோயில் அருகே உகாா்த்தே நகா்ப் பகுதியில் தீபக் என்பவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 2-பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ரூ. 35 ஆயிரத்தையும் மா்மநபா்கள் திருடியுள்ளனா்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் போலீஸாா் மற்றும் கைரேகை நிபுணா்கள் சென்று கோயிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளைப் பாா்வையிட்டு தடயங்களை சேகரித்தனா். கடந்த சுமாா் 6-மாதங்களுக்கு முன்பும் இதே தேவாலயத்தில் உண்டியல் பணம் திருடப்பட்டது. கொடைகானல் காவல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனா்.