ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டம்

குஜிலியம்பாறையை அடுத்துள்ள ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற பெரிய தேரோட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்துள்ள ராமகிரியில் பழமையான ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மாா்ச் 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீகல்யாண நரசிங்கப் பெருமாளுக்கு கடந்த 10 நாள்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக, குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக பெரிய தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் குஜிலியம்பாறை, கோவிலூா் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மின் அலங்காரத்துடன் முத்துப் பல்லக்கில் சுவாமி வீதியுலா செல்லும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com